நான் மகான் அல்ல - விமர்சனம்
அப்பாவை கொன்றவர்களை பழி வாங்கும் மகன். எல்லா மொழிகளிலும் துணி கிழிந்து போகும் அளவுக்கு துவைத்து பிழிந்தெடுத்த கதை. ஆனால், இந்த படத்தின் வசீகரம் கதையில் அல்ல.. காட்சி படுத்துதலில்.
முதல் படத்தில், அமைதியான கிராமத்து காதலை மயிலிறகு தடவுவது போல கதை சொன்ன சுசீந்தரனா இவர். நம்பவே முடியவில்லை இந்த படத்தில் ராட்சசதனமாக இருக்கிறது இவர் கதை சொல்லியிருக்கும் விதம்.
ஒரு நல்ல இயக்குனருக்கு அடையாளமே... எந்த இடத்திலும் தன்னை அடையாளபடுத்தி கொள்ள முடியாதபடி வித விதமான கதை களங்களில் புகுந்து விளையாடுவதுதான். அந்த வகையில், இரண்டாவது படத்திலேயே படு வித்தியாசம் காட்டிய சுசீந்தரனுக்கு கோடம்பாக்கம் கோட்டையில் ஒரு சீட் நிச்சயம். WELL DONE DIRECTOR !
வேலை இல்லாத ஹீரோ, பார்த்தவுடன் காதல் , அன்பான குடும்பம், இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் கும்பல், அதனால் பாதிக்கப்படும் ஹீரோ குடும்பம், கிளைமாக்சில் பழி வாங்கும் படலம் என வழக்கமான டெம்ப்ளேட் கதையமைப்பு என்றாலும் படத்தை ரசிக்க முடிவதற்க்கான காரணம், சரவெடி போல வெடித்துக்கொண்டு போகும் திரைக்கதையும், அதற்க்கு உறுதுணையாய் நிற்கும் இசையும், ஒளிப்பதிவும்தான்.
பருத்தி வீரன் சாயல் தொலைத்து, யதார்த்த சென்னை பையன் ஜீவாவாக கார்த்தி. இடைவேளை வரை சிரிக்க சிரிக்க வளைய வருபவர், பிற்பாதியில் கொலையாளிகளை தேடும் போது பரிதவிப்பையும், தூக்கி போட்டு மிதிக்கும் போது கொலை வெறியினையும் கண்களில் நன்கு வெளிப்படுத்துகிறார். மனசில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் கதாபாத்திரம் கார்த்திக்கு நன்கு பொருந்துகிறது.
பருத்தி வீரன் சாயல் தொலைத்து, யதார்த்த சென்னை பையன் ஜீவாவாக கார்த்தி. இடைவேளை வரை சிரிக்க சிரிக்க வளைய வருபவர், பிற்பாதியில் கொலையாளிகளை தேடும் போது பரிதவிப்பையும், தூக்கி போட்டு மிதிக்கும் போது கொலை வெறியினையும் கண்களில் நன்கு வெளிப்படுத்துகிறார். மனசில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் கதாபாத்திரம் கார்த்திக்கு நன்கு பொருந்துகிறது.
பார்க்கும் போதே எச்சில் முழுங்க வைக்கும் ஐந்தரை அடி ரசகுல்லாவாய் காஜல் அகர்வால். அப்படியே கடித்து சாப்பிட்டு விட தூண்டும் அழகு. அழகான பெண்கள் எல்லாம் கொஞ்சம் அரை லூசாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் சினிமா மரபை இவரும் பின் பற்றியிருக்கிறார். உண்மையில் காஜலின் குழந்தைதனமான அழகை கண்டு முழு லூசாவது நாம்தான். இவ்வளவு அழகை இடைவேளைக்கு பிறகு காட்ட மறுத்த இயக்குனருக்கு அகில இந்திய காஜல் ரசிகர் மன்றத்தின் சார்பாக எமது கண்டனங்கள். ( அடேய் மனோ, அழகான பெண்களை பற்றி எழுதும் போது மட்டும் வார்த்தைகள் எப்படித்தான் உனக்கு சரமாரியாக வந்து விழுகிறதோ..)
கார்த்தியின் அப்பாவாக ஜெய பிரகாஷ். வெகு இயல்பாக கலக்கியிருக்கிறார். காஜலிடம் பெற்றவர்களின் அருமை பற்றி பேசும் இடம் அழகான கவிதை. அப்புறம் முக்கியமாக அந்த வில்லன்கள் கூட்டம். இளம் வயது குற்றவாளிகளாக மிரட்டியிருக்கிறார்கள். பேச்சு, பார்வை, உடல் மொழி எல்லாமே பக்கா.
கார்த்தியின் அப்பாவாக ஜெய பிரகாஷ். வெகு இயல்பாக கலக்கியிருக்கிறார். காஜலிடம் பெற்றவர்களின் அருமை பற்றி பேசும் இடம் அழகான கவிதை. அப்புறம் முக்கியமாக அந்த வில்லன்கள் கூட்டம். இளம் வயது குற்றவாளிகளாக மிரட்டியிருக்கிறார்கள். பேச்சு, பார்வை, உடல் மொழி எல்லாமே பக்கா.
சின்ன சின்ன மெனக்கேடல்களில் இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது. தன்னை மிரட்டுவதற்காக காஜலின் அப்பா அனுப்பிய தாதாவை நண்பனாக்கி கொள்வது, கொலை செய்வதற்காக ஸ்கெட்ச் போட்டு தரும் அந்த மாமா கேரக்டர், என மிக சரியான கதாபாத்திர தேர்வுகள் படத்திற்கு பெரும் பலம்.
யுவனின் இசை படத்திற்கு வேறொரு நிறம் தருகிறது. ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கும் அந்த பின்னணி இசையில் இருந்து , கடைசி கட்டங்களில் தட தட வென பயணிக்கும் கிட்டார் பீட் வரைக்கும் இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். இறகை போல பாடலை மொத்த தியேட்டரும் கை தட்டி, விசில் அடித்து கொண்டாடுகிறது.
மதியின் ஒளிப்பதிவு, பாஸ்கர் சக்தியின் வசனம், ராஜீவன் கலை எல்லாமும் படு யதார்த்தம் + அழகு.
படத்தில் ஒரே ஒரு சண்டைதான். ஆனால் அதை படமாக்கியிருக்கும் விதமும், சரியான டைமிங்கும் திரை தீப்பற்றிக்கொள்ளும் அளவுக்கு பரபரக்கிறது. எதிராளியின் கால்களை பற்றி கொண்டு தடுமாறவைப்பது, கடிப்பது என அந்த சண்டை காட்சியில் உள்ள ரியலிசம், பறந்து பறந்து அடிக்கும் வழக்கமான ஸ்டன்ட் காட்சிகளுக்கு மத்தியில் வெகு புதுசாக இருக்கிறது. CONGRATS அனல் அரசு.
என்னதான் யதார்த்தமாக காட்சி படுத்துகிறேன் என்றாலும், தியேட்டரிலும், பொது இடங்களிலும் ஹீரோ முத்தமிடுவது ஆரோக்யமான விஷயமா என்ன.. தெரியவில்லை.
அதே போல, போலீஸ் மீதான திறமையே குறைத்து மதிப்பிட்டிருப்பதும் உறுத்தல்.
(+) பிளஸ்
திரைக்கதை
இசை, வசனம், ஒளிப்பதிவு
வில்லன்கள்
காஜல் (ஹி ஹி )
(-) மைனஸ்
வழக்கமான கதை
VERDICT : சிற்சில குறைகள் இருந்தாலும் கார்த்திக்கு இது ஒரு வெற்றி படமே.
RATING : 4.9 / 10.0
EXTRA பிட்டுகள்.
என்னதான் காஜலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போதும், சின்ன சின்ன பெண் கதா பாத்திரங்களுக்கு கூட அழகழகான பெண்களை போட்டு மனசை குளிர செய்த இயக்குனருக்கு அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.
மனோ, நல்ல விர்மசனம். ஆனா கார்த்திக் ரெண்டு படங்களில் ஒரு மாதிரி உடை நடை இருக்கே ?
ReplyDelete//பார்க்கும் போதே எச்சில் முழுங்க வைக்கும் ஐந்தரை அடி ரசகுல்லாவாய் காஜல் அகர்வால்.//
ReplyDeleteSuper Vimarsanam. Seekiram periya aal ayiduveenga....
அதோ...
ReplyDeleteஅதோ...
அந்த கடைசி பிட்டை வழிமொழிகிறேன்...
//அகில உலக ஜொள்ளர்கள் சங்கம்//
சங்கத்துல என்னையும் சேத்துக்கங்கப்பா....
அழகான பெண்களெல்லாம் அரை லூசாக இருப்பது சினிமாவில் மட்டும் என்பதாய் தோன்றவில்லை:-). விமர்சனம் அருமையாக இருந்தது!
ReplyDeleteஇன்னும் எத்தன வருசம் போனாலும்
ReplyDelete" என்ன மாமா சௌக்கியமா "
என்னால் மறக்கவே முடியாது,சான்சே இல்ல
யுவன் பாடும் பாடல் மட்டுமே ஹிட்டாவது எனக்கு கவலையாக இருக்கிறது,அவரின் அடுத்த ப்ளாக்பஸ்டரில் இதை உடைப்பாரா ???
/// உண்மையில் காஜலின் குழந்தைதனமான அழகை கண்டு முழு லூசாவது நாம்தான். ////
ReplyDeleteஎன்னையும் சீக்கிரம் லூசாக்கிருவீங்களோ :)
//// சின்ன சின்ன பெண் கதா பாத்திரங்களுக்கு கூட அழகழகான பெண்களை போட்டு மனசை குளிர செய்த இயக்குனருக்கு அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். ///
மனோ அந்த போட்டோல நடுவுல இருக்குற நம்ம சைனீசு படத்துல இருக்காளா :)
அப்ப சரி நாளைக்கே டிக்கெட்ட போட்டுட வேண்டியதுதான் :)
நல்ல விர்மசனம்
ReplyDeletesuper jollu hehe
ReplyDeleteFilm is nice....
ReplyDeleteNext...?
hi da mam this is karthi..i will catch you later da..but your comment so good da..
ReplyDeleteTHANKS TO
ReplyDeleteVINO
VISA SIR,
AGALVILAKKU,
MOHAN,
JILL THANNI,
KALANESAN
KARTHI