டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 2


சென்னையில் துரந்தோ ரயிலை நெருங்கியதுமே மின்சாரம் போல அந்த அதிர்ச்சி எங்களை தாக்கியது. சார்ட்டில், 65 வயது ராஜாத்தி அம்மாளை தவிர மற்ற எல்லோருமே ஆண்கள். அட ராமா... எங்கள் கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க,  சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம்.

இந்த இடத்தில் துரந்தோ ரயிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு நான் ஸ்டாப் ரயில்.  சென்னையில் கிளம்பினால் டெல்லி சென்று தான் நிற்கும். இடையில் சில ஸ்டேஷன்களில் நின்றாலும், யாரும் ஏற மாட்டார்கள்.

வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கையில் காபி கோப்பையே பிடித்தவாறு ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். தீடிரென எதிர் ட்ராக்கில் ஒரு ரயில் கடக்க,  கடந்த வேகத்தில் கையில் இருந்த காபி கப் அப்படியே பாதியாய் மடங்கி என் உடை நனைத்தது. அந்த அளவு வேகம். அதிக பட்சமாக 160 KM வேகத்தில் செல்லும் என TTR குறிப்பிட்டார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலை 6.40 க்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சரியாக 28 மணி நேரத்தில் (10.40 AM) க்கு டெல்லி சென்றடைகிறது.

இந்த ரயில் அதிக வேகம் செல்வதற்காக, ரயிலில் ஏகமாக எடையே குறைத்திருக்கிறார்கள்.  படுக்கையில் இருக்கும் மெத்தையின் அளவு பாதியாய் குறைக்கபட்டிருக்கிறது. பாத்ரூம் சென்று தரையே ஓங்கி ஒரு  உதை விட்டால் இரண்டாக பிளந்து கொள்ளும் போல.. எடை குறைவாக இருப்பதால் காற்றில் ரயில் ஆட்டம் போட்டு செல்வதை நன்றாக உணரலாம்.


இதே போல வேகத்துடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் சென்றாலும். அதில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இல்லை.  3 டயர் AC மட்டுமே. துரந்தோவில் ரூபாய் 750 க்கு நான்கு வேளை உணவுடன் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இருப்பதால் மிடில் கிளாஸ் மக்களுக்கு இது ஒரு வர பிரசாதம்.

உணவை பொறுத்தவரை குறை சொல்ல முடியாது. காலையில் ஆங்கில தினசரி கொடுக்கிறார்கள். (அது சாப்பிட இல்லை... படிக்க... ) இரண்டு பிஸ்லெரி வாட்டர் பாட்டில்கள்.  அப்புறம் டீ. சரியாக 9 மணிக்கு பிரேக் பாஸ்ட்.  டிக்கெட் புக் செய்யும் போதே VEG - நான் VEG என நம் உணவு விருப்பத்தை டிக் செய்து விட வேண்டும். VEG  என்றால் இரண்டு வடையும், ஐந்து இட்லியும். NON -VEG  என்றால் ஆம்லெட்டும், ப்ரெட் டும் கொடுக்கிறார்கள். மதியம் இரண்டு சப்பாத்திகளுடன் அரிசி சாதம். நான் VEG  என்றால் எக்ஸ்ட்ராவாய் குழம்பில் ஒரு முட்டை மிதக்கும். அவ்வளவே. மற்றபடி சிக்கன் மட்டன் வகையறாக்கள் எல்லாம் இல்லை. அப்புறம் சாயந்திரம் காபி, இரவில், மதியம் கொடுத்தது போலவே அரிசி சாதம்.

ஆரம்பத்தில், இதில் கொடுக்கப்படும் உணவின் தரம், படு கன்றாவியாக இருந்தது எனவும், இப்போது கொஞ்சம் மேம்பட்டுள்ளது என்றும்  அதில் அடிக்கடி பயணம் செய்யும் நண்பர் ஒருவர் கூறினார்.

துரந்தோவில் ஏதும் சமைப்பதில்லை. குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் உணவு ஏற்றிக்கொள்ள படுகிறது. அதனால் அந்தந்த ஊருக்கு தகுந்தபடி ருசி மாறுகிறது. இருப்பினும் உணவு நன்றாகவே இருக்கிறது.


ஒவ்வொரு கோட்சிலும் சார்ஜ் செய்யும் வசதி இருந்தாலும். இரண்டாம் வகுப்பில் எதுவுமே இயங்குவதில்லை.  3 டயர் AC சென்றுதான் சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

ரயில் சிநேகிதம் நிலையானது அல்ல என்றாலும், அந்த தருணங்களில் அது ஒரு அற்புதமான விஷயம்.   அகில், ராமதாஸ், கேட்டரிங் ஊழியர் மனோகர் போன்றோரின் நட்பு மறக்க முடியாதது.

துரந்தோவில் சாகசம் செய்யும்  பரமு 

சனி கிழமை அதிகாலை ரயில் டெல்லி நோக்கி விரைந்து கொண்டிருக்க, எனக்கும் பரமுக்கும் ஒரு அழகிய ஆசை மனதில் இருந்து கிளம்பியது. போகும் வழியில் தான் தாஜ் மாஹல் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்து உலக அதிசயத்தை காணாமல் போவதா.. ஆக்ராவில் இறங்கி கொள்ளலாம் என ஒரு தீடிர் தீர்மானம் போட்டோம். சரியாக 7 மணிக்கு ஆக்ரா வரும். ஆனால் சில சமயங்களில் மட்டும்தான் அங்கு ரயில் நிற்கும், மற்றபடி மிக மெதுவாக ஸ்டேஷனை கடந்து விடும் என நண்பர் எச்சரிக்க, குளிக்க கூட நேரம் இல்லாமல், உடல் முழுதும் பூச்சி மருந்தை அடித்துக்கொண்டு  அவசர அவசரமாக ஆக்ராவில் இறங்க ஆயுத்தம் ஆனோம்.

ஆக்ரா ஸ்டேஷன் நெருங்க.. ரயில் கொஞ்சம் வேகம் மட்டும் குறைத்து நிற்காமல் கடக்க ஆரம்பித்தது.. நான் ஓடும் ரயிலில் இருந்து திடுமென குதித்து.. தலை குப்புற விழுந்து மூக்குடைபட இருந்து சமாளித்து எழுந்து நிற்க.. பரமுவால் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. "குதிடா..குதி..." என என் அலறல் காற்றில் கரைய..   என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு, துரந்தோ பரமுவுடன் ஆக்ரா ரயில் நிலையத்தை கடக்க ஆரம்பித்தது. .

                                                             - பயணம் எக்கு தப்பாய் போகும்.

Comments

  1. சுவையான அனுபவங்கள்.தொடரட்டும்.

    ReplyDelete
  2. //// கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க, சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம். ///

    ஒரு ரெண்டு ஃபிகராவது அங்க இருந்திருக்கலாம்
    நீ பாவம் :(

    // நான் ஓடும் ரயிலில் இருந்து திடுமென குதித்து.. தலை குப்புற விழுந்து மூக்குடைபட இருந்து சமாளித்து எழுந்து நிற்க. ///

    அடடா என்ன சாகசம் இது மனோ :)
    ஆக்ரால எதாவது பொண்ண பாத்துட்டீங்களா

    பரமு ரிட்டன்சு - அடுத்த பதிவில் ஹீ ஹீ

    ReplyDelete
  3. இரயில் வேகம் போன்று உங்கள் பயணக் கட்டுரையும் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!

    ReplyDelete
  4. மக்க மூக்கு உடைந்தது பற்றி ஒன்னும் சொல்லல.. (நம்ம பேசும்போது)நல்ல வேகம் மனோ...

    ReplyDelete
  5. தொடர்ந்து வேகமாக உள்ளது பயணக்கட்டுரை.... உங்கள் துரந்தோ ரயிலைபோலவே....

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு,தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....