தேவதை பெண்ணும்... தேவாங்கு பையனும்...



பேசாமல்
நாய் குட்டியாய்
பிறப்பெடுத்திருக்கலாம்..

உன்
முகத்தோடு
முகம் சேர்த்து..

மூக்குரசும்
பாக்கியமாவது
கிடைத்திருக்கும்..

ஒருவேளை...
சிட்டு குருவியாய்
அவதரிதிருந்தாலாவது

உன்
பஞ்சுக்
கைகளில்
அடைபட்டு
சுகப்பட்டு
கிடந்திருக்கலாம்...

அட..
ஆட்டுக்குட்டியின்
 ஆயுளாவது
பெற்றிருக்க 
கூடாதா.....

தேவதை 
உன் தோள்களில் 
உற்சாக சவாரியாவது..
செய்திருக்கலாம்...

பூனையாகவாவது 
ஜீவிதம் 
வாய்த்திருக்க கூடதோ...

உன் மடியினில் 
தவழ்ந்து.. 
மார்பினில் 
புதைந்து..

என் 
உயிரை 
முழுசாய்
கரைத்திருக்கலாம்...

கன்றாய்
பிறந்திருந்தலாவது 
புண்ணியம்...
உன் தழுவல்களிலும் 
தொடர் முத்தங்களிலும் 
என் பாவங்கள் 
நீங்கப்  பெற்றிருக்கலாம்..

உலகின் 
எல்லா 
ஜீவ ராசிகளையும்
நேசிக்கிறாய்... 

என்னை 
தவிர...

எவன் 
சொன்னது... 
மனித பிறவி 
மகத்துவ பிறவி 
என்று.....

Comments

  1. நல்லா இருக்கு கவிதை ...

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்குங்க!

    ReplyDelete
  3. எல்லாம் சரி. மனிதனாக பிறந்தால் தானே இதை ரசிக்க முடியும்.

    ReplyDelete
  4. I like venkatesh's comment on this.......

    ReplyDelete

Post a Comment