TOUR SPOT - அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....
கண்டிப்பாய் காண வேண்டிய சில அழகான சுற்றுலா தலங்கள்...
அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....
உலகின் 10 சொர்கங்களில்ஒன்றான கேரளாவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இடம். இயற்கை எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களை தன்னுள் ஒளித்து வைத்து கொண்டிருக்கும். அதன் ரகசியங்களை கண்டறிந்து அதனோடு நம்மை பிணைக்கும் ஒரு அழகான மீடியேட்டர் இந்த அருவி.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத சில உணர்வுகளை, சில உற்சாகங்களை எளிதாக இந்த இடம் உங்களுக்கு கொடுத்துவிடும். பச்சை பசேல் காடுகளுக்கு மத்தியில்,யூக்கலிப்டஸ் சுவாசத்தில், மெல்லிசாய் தூறும் மழையில் நனைந்த படி, பிரவாகமாய் வந்து விழும் அருவியேய் பொறுமையாக அமர்ந்து ரசிப்பது வரம் .
இரண்டு விதமான கோணங்களில் நாம் அருவியே காண முடியும். மேலிருந்து கீழாய் விழும் நீரை அருகிருந்து பார்ப்பது ஒரு பயம் கலந்த த்ரில் அனுபவம் . பின், தனியாய் பிரிந்திறங்கும் ஒரு ஒற்றையடி பதை நம்மை அருவி விழும் இடத்திற்கு அழைத்துசெல்லும். 82 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாக வந்து விழும் அருவியின் சாரல் உங்களை முழுவதும் நனைத்து குதுகலப்படுத்தும்.
உங்கள் வயது மறந்து குழந்தையாக.. ஒரு முறை சென்று வாருங்கள். உணர்வீர்கள் ஒரு உன்னத அனுபவத்தை....
வழி காட்டி...
கோவை - திருச்சூர் - சாலக்குடி - அதிரம்பள்ளி.
0 km - 114km - 58km - 30 km
TOTAL : 202km
அல்லது...
கொச்சின் - சாலக்குடி - அதிரம்பள்ளி.
0km - 65km - 30km
சால குடியில் தங்குவதற்கு ஏற்ற இடங்கள் இருக்கிறது. பேருந்து, மற்றும் ஜீப், கார் வசதிகள் உண்டு.
உணவு வசதி -பறப்பன, ஊர்வன, நீந்துவன, என எல்லாம் கிடைக்கும்.
வரலாற்று சிறப்புகள்....
புன்னகை மன்னன் கமல் ரேகாவிற்கு கொடுத்த உலக புகழ் பெற்ற முத்தம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது உலகறிந்த விஷயம்.
மணிரத்தினம் படங்களின் கதாநாயகிகள் தவறாமல் ஜல கிரீடை செய்யுமிடம்.
வேட்டைக்காரன் படத்தில், விஜய் கூட ஒரு அருமையான காமெடி சீன் இந்த அருவியில் செய்திருப்பார்.

கல்யாணம் ஆன புதிதில் போனது... அருமையான இடம்..இந்த பதிவினை பார்த்த பிறகு இன்னும் ஒரு முறை போக ஆசை வந்திருக்கு..
ReplyDeleteகுழந்தை படம் மிகவும் அருமை..
innum poga ninaitthukondu irukkiren mudiavillai
ReplyDeleteintha vaaram kollam pogiren vanthua thai patri eluthugiren