படிக்கின்ற வயதில், பிட்டு படம் பார்ப்பதற்கு நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது. தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில் ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில். எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய் குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?" என்பார். "ப்ரெ...
Comments
Post a Comment