தமிழ் சினிமாவில் தற்போது முனுமுனுக்க வைக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் - ஒரு பார்வை.



இசையால் வசமாகா இதயமுண்டோ....?  காலை நேர வாக்கிங்கில்  நம்மோடு ஆரம்பித்து, அலுவலகம் செல்லும் வழி எங்கும் கூடவே பயணம் செய்து, இடைவேளைகளில்       இளைப்பாற வைத்து...  மாலை நேர உற்சாகங்களை இரட்டிப்பாக்கி... இரவு நம்மை தூங்க வைத்து தாலாட்டும் வரை... இசை ஒரு தாய். 

எத்தனை டென்ஷன் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ.......  நம் செவி வழி நுழைந்தால் போதும்...... மனம் லேசாகும். நம் உடலையும்... மனசையும் RE-FRESH செய்யும்  நல்ல மருத்துவர்கள் அவர்கள்.

இசையால் நம்மை வசப்படுத்த, தமிழ் சினிமாவில் நிறைய புதியவர்கள் வந்திருப்பது, இசை பிரியர்களை சந்தோஷபடுத்தும் நல்ல செய்தி. எழுத  நேரம் கிடைக்காத காரணத்தினால், நிறைய நல்ல ஆல்பங்களை பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமலேயே போய் விட்டது. தற்போது என்னை முனுமுனுக்க  வைக்கும் சில பாடல்கள் உங்களுக்காக....


கார்த்திக்கின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். அதுவும் காதல் பாடல்கள் என்றால்.... ஐஸ் க்ரீமாய் கரையும். "வேங்கை"யில்   வரும்  "காலங்கார்த்தாலே" பாடல் வெரி இம்ப்ரசிவ்.     தேவிஸ்ரீ பிரசாத்தின்  அழகான  பீட்டில் சரணத்தில் நீளும் அந்த சங்கதிகள் ரொம்பவுமே ஸ்பெஷல். அதே படத்தில் வரும்,  "என்ன சொல்ல  போற" பாடலும் திரும்ப திரும்ப முனுமுனுக்க வைக்கும் ரகம்.


புதிய இசையமைப்பாளர் அருள் தேவ், ஹரிஹரன் குரலில், போட்டா போட்டியில் கொடுத்திருக்கும்,  "இது வரை"  பாடல் அழகான மெலடி. கொஞ்சம் "கண்கள் இரண்டால்" சாயல் இருந்தாலும் இந்த பாடல் இவருக்கு மிக சிறந்த விசிடிங் கார்டு.


அதேபோல , புதுமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது முதல் படத்திலேயே (வாகை சூட வா) எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.     நேஹா பேசின் பாடியிருக்கும் "போறானே" பாடல் ஆல்பத்தின் ஹாட் கேக். அப்புறம், சின்மயி குரலில் வரும் "சர சர" பாடலும் தினசரி ப்ளே லிஸ்ட்டில் நிச்சயம்  இருந்தே  ஆகவேண்டிய ஒன்று.  குதுகலப்படுத்தும் இசை அந்த பாடல் முழுதும் நிரம்பி வழிகிறது.

குத்து பாடல்தான். ஆனாலும் அந்த குரல் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கிறது. காஞ்சனா படத்தில் வரும் " கருப்பு  பேரழகா" பாடலில்   தர்சனாவின் குரல் அவ்வளவு அழகு. கொஞ்சி கொஞ்சி பாடும் அந்த குரலுக்கு நான் ரசிகன் ஆகி விட்டேன்.


தமனின் இன்னொரு முக்கியமான ஆல்பம். "வந்தான் வென்றான்". "காஞ்சன மாலா ", "அஞ்சனா" என நிறைய வசீகரங்கள் இருந்தாலும் தமன் உருகும் "நகருதே" பாடல் SOMETHING SPECIAL.   மிக  சிறப்பான  ஆர்க்கேஸ்ட்ரேஷன்   மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

எல்லா மியூசிக் சானல்களிலும், ரௌத்திரம் படத்தின்  "அழகே  உன்  கண்கள்  " பாடல்தான் ரிபீட்   ஆகிறது. அதை விட ரெணைனா   ரெட்டியின் ரொமாண்டிக் குரலில் வரும் "மாலை மயங்கும் நேரம் " மிகவும் ரம்மியம்.   இரவு  நேர  I-POD சாய்ஸ் .

 அடுத்ததாக, ஹாரிஸின் ஏழாம் அறிவு, நண்பன், விஜய் ஆண்டனியின் "வேலாயுதம்" என இசை மழை காத்திருக்கிறது. நனைவோம். 


Comments

  1. ithula irukkura onnu kooda innum kekkala, dwnld panni paakuran :)

    ReplyDelete
  2. ஆகா எல்லாம் பாட்டும் எனக்கும் பிடித்ததே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....