மங்காத்தா - இசை விமர்சனம்
வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி என்றாலே உற்சாகமான இசைக்கு குறை இருக்காது. இதில் அஜித் வேறு இணைந்தவுடன் எதிர்பார்ப்புகள் எவரெஸ்ட் உயரத்திற்கு எகிற... மங்கத்தா இந்த எதிர்பார்ப்புகளை முழுமை படுத்தியிருக்கிறதா.... ?
முதல் பாடல் "விளையாடு மங்காத்தா " ஏற்கனவே ஒற்றை ஆல்பமாக வெளிவந்து ரசிக கண்மணிகளின் பல்ஸ் பார்த்தது. தல ரசிகர்களை மட்டுமே உசுப்பேற்றும் அந்த பாடல் இசை ரசிகர்களை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பதே உண்மை. அனால் அந்த ஆரம்ப இசை செம மிரட்டல்.
ஆல்பத்தின் இரண்டாவது பாடல் " நீ நான் " நல்ல மெலடி. SPB குரலில் இருக்கும் ஒரு தனித்துவம் அவரது மகன் குரலிலும் தொடர்வது சிறப்பு. நிரஞ்சன் பாரதியின் அழகான வரிகளும், சரண், பவதாரணி மயக்கும் குரல்களும் இப்பாடலின் ஸ்கோரை ஏற்றுகிறது. பல்லவியில் ஆரம்பிக்கும் வசீகரம், சரணத்தில் தொலைந்து போவதுதான் கொஞ்சம் வருத்தம்.
கோவாவில் கேட்ட " இடை வழி " பாடல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இதில் "வாடா பின்லேடா" ஆகியிருக்கிறது. சுசித்ரா குரலில் இருக்கும் ஒரு போதை இப்பாடலின் பிளஸ். ஆர்கேஸ்ட்ட்ரஷனில் நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்திருக்கிறார் யுவன். ஆனாலும் வரிகள் அநியாயத்திற்கு உவ்வே ரகம்.
"மச்சி OPEN THE BOTTLE" என அடுத்த குத்துக்கு கிளம்பி விட்டார்கள் வெங்கட் பிரபு கோஷ்டியினர். அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். "சரோஜா சாமான் நிக்காலோ" போல இதுவும் மியூசிக் சானல்களின் புண்ணியத்தில் ஹிட்டாகும் . இடையில் " ராமன் ஆண்டாலும் " படலை ரீ மிக்ஸ் செய்திருப்பது சூப்பர்.
மதுஸ்ரீயின் குரலில் தொடங்கும் "நண்பனே" மிக மெதுவான மெலடி என்பதால் கடந்துவிடலாம் என FORWARD பட்டனை அமுக்கும் முன்பே, யுவனின் காந்த குரல் அப்படியே கட்டிப்போடுகிறது. ஏற்கனவே சொன்னது போல யுவனின் குரல் காதலுக்காக டெடிக்கேட் செய்தாகிவிட்டது. மெதுவான அனால் மென்மையான மெலடி.
"பல்லேலக்கா " பாடலில் அப்படியொன்றும் விசேஷமில்லை. ஐந்தோடு ஆறு. அவ்வளவே. ஒரே விசேஷம் துரை தயாநிதியின் துணைவியார் பாடியிருப்பது. குரல் வளம் OK .
அஜீத்துக்கான அட்டகாசமான பில்ட் அப். மங்காத்தா தீம் மியூசிக். படம் ஹிட்டாகும் பட்சத்தில் இந்த தீம் மியூசிக் நன்கு பேசப்படலாம்.
மொத்தத்தில்... அஜித் ரசிகர்களை ஏமாற்றாத, யுவன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத ABOVE AVERAGE ALBUM இந்த மங்காத்தா.
SONGS CAN LISTEN :
நீ நான்...
மச்சி OPEN THE பாட்டில்
நண்பனே
VERDICT : ABOVE AVERAGE
RATING : 2.6/5
Comments
Post a Comment