கிரிக்கெட் காதலன்
மூர்த்தி வெகு அலட்சியமாய் பபிள் கம்மை மென்றபடி சுற்றி நிற்கும் பீல்டிங் வளையத்தை கண்களால் அளந்தான். லாங் OFF , லாங் ஆன் இரண்டு புறமும் பீல்டர்கள் ஆணி அடித்தது போல நிற்க, எதிரணி கேப்டன் மேலும் இருவரை லெக் சைடில் நிற்க வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தான். இரண்டே பந்துகள் 10 ரன்கள் தேவை. கடைசி பந்தில் மூர்த்தி அடித்த பவுண்டரி ஆட்டத்தை சூடு கிளப்பி வைத்திருக்க மொத்த கூட்டமும் கண் இமைக்க மறந்து நகம் கடித்தது.. அந்த பௌலேர் உள்ளங்கை வியர்த்திருக்க , தரையில் கைகளை தேய்த்து கொண்டான். கேப்டன் அவனிடம் தீவிர ஆலோசனை செய்து அவன் முதுகை தட்டி கொடுத்து உற்சாக படுத்த, அந்த பௌலேர் சற்றே நிதானித்து.. சீராக அடி எடுத்து விக்கெட்டை நோக்கி ஓடி வர.. மூர்த்தி ஒரு முறை உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்து கொண்டான். அந்த பௌலேர் சரியான லைன் அண்ட் லென்த்தில் விக்கெட்டிற்கு நேராக அசுர வேகத்தில் எரிய.. மூர்த்தி விடு விடுவென ஸ்டெம்ப்பை கடந்து திரும்பி நின்று .. கிட்டத்தட்ட தற்கொலைக்கு இணையான ஷாட் அது.. நேராக கீப்பரின் தலைக்கு மேல் பந்தை அறைந்து அனுப்ப.. அது இரட்டை வேகத்துடன் எல்லை கோட்டை தாண்டி சிக்சராக மாறியது. மைதானம