TOUR SPOT - நெல்லியம்பதி
நெல்லியம்பதி - ட்ரக்கிங் பிரியர்களுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஒரு சேர ஏற்ற இடம். வருடம் முழுதும் ஒரு ஐடியல் கிளைமேட் நிலவுவது (குளிர் காலத்தில் - குறைந்த பட்சம் 15 டிகிரி. வெயில் காலத்தில் - அதிக பட்சம் 30 டிகிரி ) இதன் சிறப்பம்சம்.
சுற்றிலும் டீ எஸ்டேட்டுகள், இன்னமும் மனிதர்கள் காலடி படாத வனச்சிகரங்கள், தீடிர் ஆச்சரியங்களாக ஆங்காங்கே தென்படும் சிற்றாறுகள் என நெல்லியயம்பதி நிறைய சுவாரசியங்களை கொண்டிருக்கிறது...
பாலக்காடு மாவட்டம் நெம்மரா டவுனிலிருந்து 25 KM மலை பாதையில் அமைந்துள்ளது நெல்லியம்பதி. மலை அடிவாரத்திலேய நம்மை வரவேற்கிறது பொத்துண்டி அணை.
பொத்துண்டி அணை
19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இந்த அணை சிமெண்ட் ஏதுமின்றி வெறும் கற்களும், இரும்பு கலவைகளும் கொண்டு அமைந்தது. ஆசியாவில் சிமெண்ட் இன்றி கட்டப்பட்ட 2 வது அணை என்ற பெருமை இதற்குண்டு.
பொத்துண்டி அணை
19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இந்த அணை சிமெண்ட் ஏதுமின்றி வெறும் கற்களும், இரும்பு கலவைகளும் கொண்டு அமைந்தது. ஆசியாவில் சிமெண்ட் இன்றி கட்டப்பட்ட 2 வது அணை என்ற பெருமை இதற்குண்டு.
மாம்பாறை : நெல்லியம்பதியின் TOP MOST ATTRACTION மாம்பாறை எனப்படும் VIEW பாயிண்ட். கடல் மட்டத்திலிருந்து 5250 அடி உயரத்தில் அட்டகாசமாய் பச்சை கார்பெட் விரித்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது இயற்கை. ஜீப்பில் மட்டுமே செல்லக்கூடிய கடுமையான பாறைகள் மீதான மலை பாதை. செல்லும் போது வாந்தி, பேதி, மயக்கம் என எல்லா உபாதைகளையும் தந்தாலும் சென்றடையும் இடம் சொர்க்கம். விக்ரம் மஜா படத்தில் சிந்து துலானி யோடு ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவாரே.. அதே இடம்தான். தனிமை விரும்பிகளுக்கு அற்புதமான சாய்ஸ்.
மாம்பாறை செல்லும் வழி.
படகிரி வன சிகரம் : ட்ரக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். இரவில் கேம்ப் பயர் எனப்படும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் விடிந்த பின்னும் தொடர்கின்றன... யூத் ஸ்பெஷல்.
சீத குண்டு : 1000 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் ஆழகான அருவியும், அதை சுற்றி உள்ள நெருக்கமான வன சூழலும் தரும் அனுபவம் எழுத்தில் புரியாது. ராமர்,லட்சுமன், சீதை வசித்த இடம் என்ற பெருமை இதற்குண்டு
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை மிக குறைந்த செலவில் அனுபவிக்க நெல்லியம்பதி மிக சரியான தேர்வு.தங்குவதற்கு அருமையான RESORT கள் உண்டு. முக்கியமாய் கிரீன் லேன்ட் ரிசார்ட்.
தமிழ் நாடு ஸ்டைல், கேரளா ஸ்டைல் இரண்டு வகை உணவுகளும் கிடைகின்றன.
பஸ் வசதி குறைவு. தனி வாகனங்களில் செல்வது நலம்.
தமிழ் நாடு ஸ்டைல், கேரளா ஸ்டைல் இரண்டு வகை உணவுகளும் கிடைகின்றன.
பஸ் வசதி குறைவு. தனி வாகனங்களில் செல்வது நலம்.
வழி காட்டி :
பாலக்காட்டில் இருந்து 75 K.M
பொள்ளாச்சியில் இருந்து 70 K.M
பாலக்காட்டில் இருந்து 75 K.M
பொள்ளாச்சியில் இருந்து 70 K.M
TOUR SPOT-தகவல் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநெல்லியாம்பதிக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்களின் இந்தப் பதிவு.
ReplyDeleteபோயிடுவோம்ல கூடிய சீக்கிரமே!
ReplyDeleteரேகா ராகவன்.
Very sweet,lovely and cute and also useful information.......
ReplyDeleteஇந்த மாதம் 24 ஆம் தேதி எங்கள் அலுவலக சுற்றுலா செல்ல இருக்கிறோம், நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை முன்னோட்டம் பார்க்கப் போகிறோம்.. உங்களின் தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது.. உங்களை எப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்வது..? இன்னும் கொஞ்சம் தகவல் தேவை.. நன்றி..
ReplyDelete