ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்


டெம்ப்ளெட் கதை, முந்தைய இரண்டு படங்களை விட கொஞ்சமும் லாஜிக் இல்லாத திரைக்கதை, நடிப்பு என்றால்  கிலோ என்ன விலை என கேட்கும் ஹீரோ ஹீரோயின் என ஏகப்பட்ட ஓட்டைகள் கொண்ட படகில் சந்தானம் என்னும் லைப் ஜாக்கெட்டை நம்பி பயணம் செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். லைப் ஜாக்கெட் உயிரை (படத்தை) காப்பாற்றியிருக்கிறது. 


ஒரு அணியின் பதினோரு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடும்போதுதான்  கிரிக்கெட்டில் வெற்றி வாய்க்கிறது. சில சமயங்களில் மட்டுமே ஒன் மேன் ஷோ எடுபடும். ராஜேஷின் டீமில் சந்தானம் என்கின்ற ஒற்றை பேட்ஸ் மேன் மட்டுமே காமெடி ஏரியாவில் பயங்கர ஸ்கோர் செய்து ஆட்டத்தை வெற்றி பெற வைப்பது பலமா பலவீனமா என்பது கேப்டன் ராஜேஷ் இனிவரும் ஆட்டங்களில் யோசிப்பது நலம். 

ஏனென்றால், முதல் இரண்டு படங்களில் இருந்த இயக்குனரின் கதை நகர்த்தல் சாமர்த்தியம் பிளஸ் கொஞ்சம் நம்பும் படியான லாஜிக் இதில் சுத்தமாய்   இல்லாதது கொஞ்சம் அல்ல ரொம்பவே இடிக்கிறது. திரையில் சந்தானத்தை கண்டதும் கிடைக்கும் திருவிழா உற்சாகம் அவர் இல்லாத நேரங்களில் முற்றிலும் வடிந்துவிடுவதே இதற்க்கு சாட்சி. 




ஓகே,  கொஞ்சம் அப்பா டக்கராக படத்தை போஸ்ட் மார்ட்டம் செய்தது போதும். இரண்டரை மணி நேரத்தை இந்த படம் எப்படி கடக்க வைக்கிறது? வசனகர்த்தா ராஜேஷுக்கும், சந்தானத்துக்கும் ஒரு மெகா சைஸ் பொக்கே. சந்தானம் அடிக்கும் ஒன் லைனர்களில் தியேட்டர் மொத்தமும் அல்லு சில்லாகிறது. சுழற்றி அடிக்கும் வெயில், அதில் பெட்ரோல் ஊற்றி உடலையும், மனதையும் எரிய வைக்கும் மின்சார தட்டுப்பாடு,   என தன்னை சுற்றியிருக்கும் கோரமான கவலைகளை  கொஞ்சமே கொஞ்ச நேரம் மறக்கடித்து வாய் விட்டு சிரிக்க வைத்ததற்காக ரெண்டு பேருக்கும் பெரிய திருஷ்டி பூசனியே சுற்றிப்போடலாம். 

 "வேணாம் மச்சான் வேணாம்" பாடல் ஒட்டு மொத்த ஆண் குலத்துக்கும் காணிக்கை. ஒவ்வொரு ஆண் மகனின் ஏமாற்றம், வாழ்வில் பெண்களால் எதிர்கொண்ட நிதர்சனம் என சீட்டிலிருந்து தன்னை மறந்து எழுந்து ஆட வைத்ததில் பெண்கள் மீதான ஆண்களின் மன பிரதிபலிப்பை நன்கு உணர்த்துகிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் வரும் டைம்மிங் இன்னமும் பொருத்தமாய் அமைந்த்திருந்தால் இன்னமும் மிக பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கலாம். 

அதேபோல, கிளைமாக்சில் உதயநிதி, சந்தானம் கல்யாண மண்டபத்தில் நிகழ்த்தும்  காதல் உரை ரொம்பவே இம்ப்ப்ரசிவ். மிக எளிதாக, படத்தின் நெகிழ்ச்சியான காட்சியாக அதை உணர வைக்கும் வாய்ப்பை, உதயநிதி, ஹன்சிகா வின் அழுத்தமில்லாத ஆரம்ப காதல் காட்சிகளால் ராஜேஷ் கோட்டை விட்டிருக்கிறார்.  இறுதியில் வரும் அந்த நல்ல சீனில் காதலை பற்றிய போதுமான இம்ப்பாக்ட்டை கொடுக்காமல் வெறும் காமெடியாக மட்டுமே நகர்ந்து போவதுதான் கொஞ்சம் வருத்தம். 


ஒரு  காலத்தில் ஹாரிஸ் இசை என்பது, ஆச்சரியமான, புது புது சப்தங்கள், மன வருடல்கள் கொண்ட மயிலிறகு இசையாய் இருந்தது. ஆனால் அதே இசையையே பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் மீண்டும் கொடுப்பது ஆயாசத்தை கொடுக்கிறது. பின்னணி இசை என்கின்ற ஒரு விஷயம் எவ்வளவு அதி முக்கியமானது என்பதை ஹாரிஸ், ராஜாவின் பழைய படங்களை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டும். 


 படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத கவர்ச்சியே திணிக்காமல்,  ஹீரோயிசம் என்ற பெயரில்  பைட்டர்களை அந்தரத்தில் பறக்கவைத்து இம்சை செய்யாமல், படம் விட்டு வெளியே வரும் ஒவ்வொருவனும் பீதியில் அன்றைய இரவு தூங்கவிடாமல் செய்யும் ரத்தமயமான ட்ராஜிடி கிளைமாக்ஸ் சமாச்சாரங்களை தவிர்த்து சிரிப்பை மட்டுமே மூலதனமாய் வைத்து படம் பண்ணும் ராஜேஷ் ஒகே தான். 

 (+) பிளஸ் 

வசனகர்த்தா ராஜேஷ்
சந்தானம் 
வேணாம் மச்சான் பாடல்.
போரடிக்காமல் செல்லும் காமெடி 


(-) மைனஸ்

கதையாசிரியர் ராஜேஷ்
பின்னணி இசை. 
அழுத்தமில்லாத காதல் எபிசொட். 


VERDICT : TIME PASS. 
RATING   : 4.7/10.0


EXTRA பிட்டுகள். 

திருப்பூரில் எட்டு மணி நேர பவர் கட் என்ன பாடு படுத்துகிறது என்பதை மொக்கை படத்துக்கு கூட பகல் வேளைகளில் கூட்டம் சேரும் ஏ.சி  தியேட்டர்களை பார்த்தாலே புரிகிறது. தனுஷின் சமீபத்திய அட்டகாச பிளாப் படத்திற்கு கூட பகல் காட்சி ஹவுஸ் புல்.

 நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறேன், நிற்காமல் தொடர வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம். 



 
 

  
 

 

Comments

  1. ஓஹோ....கரண்ட் இல்லைனா அங்க எல்லா படமும் ஹிட் ஆகிடும் போல...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....