ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்
டெம்ப்ளெட் கதை, முந்தைய இரண்டு படங்களை விட கொஞ்சமும் லாஜிக் இல்லாத திரைக்கதை, நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் ஹீரோ ஹீரோயின் என ஏகப்பட்ட ஓட்டைகள் கொண்ட படகில் சந்தானம் என்னும் லைப் ஜாக்கெட்டை நம்பி பயணம் செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். லைப் ஜாக்கெட் உயிரை (படத்தை) காப்பாற்றியிருக்கிறது. ஒரு அணியின் பதினோரு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடும்போதுதான் கிரிக்கெட்டில் வெற்றி வாய்க்கிறது. சில சமயங்களில் மட்டுமே ஒன் மேன் ஷோ எடுபடும். ராஜேஷின் டீமில் சந்தானம் என்கின்ற ஒற்றை பேட்ஸ் மேன் மட்டுமே காமெடி ஏரியாவில் பயங்கர ஸ்கோர் செய்து ஆட்டத்தை வெற்றி பெற வைப்பது பலமா பலவீனமா என்பது கேப்டன் ராஜேஷ் இனிவரும் ஆட்டங்களில் யோசிப்பது நலம். ஏனென்றால், முதல் இரண்டு படங்களில் இருந்த இயக்குனரின் கதை நகர்த்தல் சாமர்த்தியம் பிளஸ் கொஞ்சம் நம்பும் படியான லாஜிக் இதில் சுத்தமாய் இல்லாதது கொஞ்சம் அல்ல ரொம்பவே இடிக்கிறது. திரையில் சந்தானத்தை கண்டதும் கிடைக்கும் திருவிழா உற்சாகம் அவர் இல்லாத நேரங்களில் முற்றிலும் வடிந்துவிடுவதே இதற்க்கு சாட்சி. ஓகே, கொஞ்சம் அப்பா டக