Posts

அவன் இவன் - விமர்சனம்

Image
பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் திருவிழா போல பாலாவின் புதிய படைப்பு அவன் இவன்.   பக்கத்தில் இருக்கும் காசியில் மதியம் மூன்று மணி முதலே  இரவு காட்சிக்கு ஹவுஸ் புல்.  உதயத்திலும் அதே நிலை. சத்யம், PVR  சினிமா எல்லாவற்றிலும் அடுத்த இரண்டு நாளைக்கு டிக்கெட் இல்லை. என்ன செய்ய.... பாலா படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்கின்ற வெறி...   சரி கடைசியாய் பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய பரங்கி மலை ஜோதியில் முயற்சிக்கலாம் என்று வண்டியே கிளப்பினால்... வழியெங்கும் வாகன ஊர்வலம். பயங்கர டிராபிக் ஜாமில் என் SPLENDOUR PLUS மிதந்து... ஊர்ந்து.. நகர்ந்து.. கிடைத்த சிறு சிறு இடைவெளிகளில் உயிரை பணயம் வைத்து அங்கே சென்றால்.... அனுமார் வால் போல நீண்ட நெடிய வரிசை. கடைசி நேர காத்திருப்புக்கு பின் கிடைத்தது டிக்கெட்.  பரமுக்கு போன் அடித்தால், அவன் தன் வருங்கால துணையுடன் தி நகரில் பனியன்  எடுத்துக்கொண்டிருக்க.... அவன் இவனுக்கு டிக்கெட் கிடைத்து விட்டது என சொன்னவுடன்...... உலகம் மறந்து.. தன் துணை... மனை ..  மறந்து அடுத்த எலெக்ட்ரிக்  ட்ரெயின் பிடித்து...

எங்கேயும் காதல் - விமர்சனம்

Image
கல்பாத்தி S அகோரமிற்க்கும் , சன் பிக்ச்சர்சுக்கும்  ..... அரகர அரகர அரோகரா...  இதே கதையே ராம நாராயணனிடம் கொடுத்திருந்தால், பாப்பநாயக்கன் பட்டி வயற்காட்டில்  மாதம் முழுதும் வியர்வை சிந்தி வேலை செய்து விட்டு, மாதத்திற்க்கொருமுறை  பொள்ளாச்சி டவுனுக்கு வந்து சரக்கடித்து சல்லாபம் செய்யும் இளைஞனையும் அவனது காதலையும் மினிமம் பட்ஜெட்டில் காட்டி போட்ட காசையாவது திருப்பி  எடுத்து கொடுத்திருப்பார்.  ஆனால் இதன் இயக்குனர் பிரபு தேவா என்பதால்...  அதுவும் இது நூறு சதவீத காதல் கதை என்பதால் கதை களம் பாரீஸ். அவ்வளவு தூரம் போய் எடுத்த படத்தில் கதை வேண்டாம்... அட்லீஸ்ட் கொஞ்சம் காதலாவது இருந்திருக்க வேண்டாமா... ம்ம்ஹூம்.     ஏமாற்றிவிட்டார் பிரபு.  படத்தின்  ஹீரோ ஒரு அப்பா டக்கர். அதாவது காதல் என்ற பெயரில் ஒரே  பெண்ணிடம் மாட்டிக்கொள்ளாமல், தினம் ஒரு பெண்ணுடன் இரவை கழிப்பவர். ஜாலி வாலா.. சூதாடி சித்தன் இன்னும் என்னன்னவோ... ஆனால் ரொம்ப நல்லவர்.... எப்படி என்றால் அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட கூட மாட்டார். அவரை நம்பி ஒரு பெண...

கோ - விமர்சனம்

Image
ஒரு விறுவிறுப்பான நாவல் வாசிக்கும் அனுபவத்தை  அதன் சுவை குறையாமல் அப்படியே விஷுவல் ட்ரீட்டாக தருவதில் இயக்குனர் கே.வி. ஆனந்த் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.  மணிரத்தினம் தனது ஆயுத எழுத்து படத்தில் படித்த  இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மூன்றில் ஒரு பங்காக சொல்லி சென்றதை  கே.வி இதில் முழுசாய்  பின் தொடர்ந்திருக்கிறார்.  கந்து வட்டி, கடத்தல் என படத்திற்கு படம் வேறு வேறு களம் தேடும் கே வி இதில் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு பிடித்தமான போட்டோ ஜர்னலிசம். வித விதமான புகைப்படங்களை  டைட்டிலில் வரிசைபடுத்தும் போதே போட்டோகிராபி மீதான அவரது காதல் 'கிளிக்'கிடுகிறது. . ஒரு தின நாளிதளின் சர்க்குலேஷனை அனுதினமும் உச்சியில் வைக்க உதவுவது புகைப்படக்காரர் ஜீவாவின் பணி.அன்றாட அரசியல் அக்கப்போர்களை   இவரது கேமரா வெளிச்சம் போட்டு காட்ட...  ஒரு புதிய மாறுதலாக இளைஞர் படை ஒன்று ஆட்சியே பிடிக்க நேரிடுகிறது.   ஆட்சியே பிடிக்க மறைமுகமாக உதவிய ஜீவாவையே  திடுக்கிட வைக்கும் சாணக்கிய தந்திரங்கள் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாய் வெளிப்பட... ...

நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?

Image
கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம்.  இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை.  அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்.. சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் ...

தேகம் - புத்தக விமர்சனம்

Image
சென்னை புத்தக கண்காட்சியில் சாருவின் "தேகம்" வாழைக்காய் பஜ்ஜி போல சுட சுட விற்றுக்கொண்டிருந்தது. அப்போது என் நிதி  நிலைமை சற்று சிறப்பாக இல்லாத படியால் வாங்க முடியாமல் போய் விட்டது.  இடையில்... என் நண்பனொருவன்... புத்தகங்களின் மீது அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவன், என் தொடர் நச்சரிப்பின்  காரணமாக புத்தகம் படிக்க ஆரம்பித்து   சுஜாதா, கல்கி மூலமாக புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை நிறையவே வளர்த்திருந்தான். புதிததாய் கல்யாணமான தன மனைவியுடன் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றவன்... அங்கிருந்து செல்பேசியில்... என்ன புத்தகம் வாங்கலாம்... சொல்லுடா என்றான். நானும்.... இரண்டு மூன்று நல்ல சுஜாதா புத்தகங்களை சொல்லிவிட்டு... கடைசியாய்... சாருவின் தேகம் கிடைத்தால் வாங்கி படி..  ரொம்ப நல்ல இருக்குதாம் என்றேன். கணவன் மனைவி சகிதம் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி.. தேடியலைந்து ஒரு வழியாய் 'தேகம்' வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறான். அன்றிரவே... எனக்கு போன்... எடுத்தால்... எழுத்தில் சொல்ல முடியாத தூய தமிழ் கெட்ட வார்த்தைகள் நான்கைந்தை சொல்லிவிட்டு வைத்துவிட்டான். ...

நடு நீசி நாய்கள் - விமர்சனம்

Image
இப்படி ஒரு கப்பித்தனமான  படத்தை கௌதமிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கதை என்ற பெயரில் வக்கிரத்தை வாந்தி எடுத்து வைத்திருக்கும் அவரது இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு புள்ளி.  அதீத சகிப்புத்தன்மை,  வித்தியாச சினிமா மீதான காதல், போதுமான  தலைவலி மாத்திரைகள்  என, என்ன காரணங்கள்  உங்களிடம் இருந்தாலும் இந்த படம் உங்களுக்கு வேண்டாம். காரணம்.... மனித மனம் விலங்கு என்றாலும்.... மிருகமாகிவிடக்கூடது என்றுதான் நாம் வளர்க்க படுகிறோம்... நம் ஆறாவது அறிவும் அதைதான் பன்படுத்துகிறது... இந்த படம் நம்மை... நம் மனதை  மிருகமாய் மாற்ற செய்யும் ஒரு கூறுகெட்ட முயற்சி.   ரசனையான தலைப்பு, அட்டகாசமான மார்க்கட்டிங், கெளதம் மேனன் என்னும் லேபிள்,  என பலபேரை தியேட்டருக்கு உள்ளே வரவழைத்தாலும் வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரி அடிக்க ஓடவைக்கும் திரைக்கதையும், கன்றாவி காட்சிபடுத்தல்களும் போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது.  ஒரு வேளை, இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், நல்ல மனநல மருத்துவரை உட...

கோப்பையும்... கனவும்.....

Image
 "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும்  பிரியாணி  தின்றாலும், இரண்டு  வருடத்திற்க்கொருமுறை  வன  பத்ரகாளியம்மன்  கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து...  1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில்  அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை  போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி  அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை  கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை  தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி  மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது.....