Posts

நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?

Image
கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம்.  இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை.  அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்.. சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் ...

தேகம் - புத்தக விமர்சனம்

Image
சென்னை புத்தக கண்காட்சியில் சாருவின் "தேகம்" வாழைக்காய் பஜ்ஜி போல சுட சுட விற்றுக்கொண்டிருந்தது. அப்போது என் நிதி  நிலைமை சற்று சிறப்பாக இல்லாத படியால் வாங்க முடியாமல் போய் விட்டது.  இடையில்... என் நண்பனொருவன்... புத்தகங்களின் மீது அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவன், என் தொடர் நச்சரிப்பின்  காரணமாக புத்தகம் படிக்க ஆரம்பித்து   சுஜாதா, கல்கி மூலமாக புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை நிறையவே வளர்த்திருந்தான். புதிததாய் கல்யாணமான தன மனைவியுடன் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றவன்... அங்கிருந்து செல்பேசியில்... என்ன புத்தகம் வாங்கலாம்... சொல்லுடா என்றான். நானும்.... இரண்டு மூன்று நல்ல சுஜாதா புத்தகங்களை சொல்லிவிட்டு... கடைசியாய்... சாருவின் தேகம் கிடைத்தால் வாங்கி படி..  ரொம்ப நல்ல இருக்குதாம் என்றேன். கணவன் மனைவி சகிதம் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி.. தேடியலைந்து ஒரு வழியாய் 'தேகம்' வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறான். அன்றிரவே... எனக்கு போன்... எடுத்தால்... எழுத்தில் சொல்ல முடியாத தூய தமிழ் கெட்ட வார்த்தைகள் நான்கைந்தை சொல்லிவிட்டு வைத்துவிட்டான். ...

நடு நீசி நாய்கள் - விமர்சனம்

Image
இப்படி ஒரு கப்பித்தனமான  படத்தை கௌதமிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கதை என்ற பெயரில் வக்கிரத்தை வாந்தி எடுத்து வைத்திருக்கும் அவரது இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு புள்ளி.  அதீத சகிப்புத்தன்மை,  வித்தியாச சினிமா மீதான காதல், போதுமான  தலைவலி மாத்திரைகள்  என, என்ன காரணங்கள்  உங்களிடம் இருந்தாலும் இந்த படம் உங்களுக்கு வேண்டாம். காரணம்.... மனித மனம் விலங்கு என்றாலும்.... மிருகமாகிவிடக்கூடது என்றுதான் நாம் வளர்க்க படுகிறோம்... நம் ஆறாவது அறிவும் அதைதான் பன்படுத்துகிறது... இந்த படம் நம்மை... நம் மனதை  மிருகமாய் மாற்ற செய்யும் ஒரு கூறுகெட்ட முயற்சி.   ரசனையான தலைப்பு, அட்டகாசமான மார்க்கட்டிங், கெளதம் மேனன் என்னும் லேபிள்,  என பலபேரை தியேட்டருக்கு உள்ளே வரவழைத்தாலும் வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரி அடிக்க ஓடவைக்கும் திரைக்கதையும், கன்றாவி காட்சிபடுத்தல்களும் போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது.  ஒரு வேளை, இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், நல்ல மனநல மருத்துவரை உட...

கோப்பையும்... கனவும்.....

Image
 "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும்  பிரியாணி  தின்றாலும், இரண்டு  வருடத்திற்க்கொருமுறை  வன  பத்ரகாளியம்மன்  கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து...  1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில்  அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை  போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி  அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை  கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை  தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி  மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது.....

யுவனின் அசத்தல் இசை - "பேசு" - இசை விமர்சனம்.

Image
F.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட்  பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM .  யதோட்சையாக FM  கேட்க நேர்ந்த போது, "I HAVE A DREAM" என யுவன் உருகிக்கொண்டிருந்தார்.   என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் "பேசு". இப்படி ஒரு படம் வரவிருக்கிறது  என்று  இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது.  முதல் பாடலான " I HAVE A DREAM" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது.  ஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா  குரல்களில் "இதயம் பேசுதே" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விட...

பயணம் - விமர்சனம்

Image
ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். என்னுடைய பயம் விமான பயணத்தில். பூமிக்கும் வானுக்கும் எந்த வித சப்போர்ட் இல்லாமல் அந்தரத்தில் இப்படி பறக்கிறதே... விழுந்து கிழுந்து வைத்தால்... ஒன்றுமே மிஞ்சாதே என்கின்ற பயம். அதுவும் ட்வின் டவர் தாக்குதலுக்கு பிறகு... விமான பயணம் பற்றிய என் பயம் பாம்பை கண்ட எலி போல இன்னும் எகிற ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் அதுவரை நான் ஒரு விமான பயணம் கூட மேற்கொண்டதில்லை. கடைசி வரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும்  பரவாயில்லை என்கின்ற உயர்ந்த எண்ணம் என்னுள் இருந்தது. நம் ஆசை இப்படி இருந்தால் கடவுளின் ஆசை அதற்க்கு எதிராகத்தானே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் வலுகட்டாயமாக என்னை ஒரு விமானபயணம் செய்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாக்கினார். டெல்லியில் இருந்து கோவை வரை நான் மேற்கொண்ட அந்த சாகச பயணத்தை பற்றி தனி பதிவாக போடுகிறேன். அவ்வளவு பயம் கொண்ட எனக்கு, ராதாமோகனின் இந்த விமான 'பயணம்' ஏகத்துக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்து.... நாமும் அந்த விமானத்தில் இருந்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தையும்  ஏற்படுத்தியது.  ந...

யுத்தம் செய் - விமர்சனம்

Image
காட்சி அனுபவத்திற்கும், வாசிப்பு அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காட்சி அனுபவத்தை விட வாசிப்பு அனுபவம் விசாலமானது... எல்லைகள் அற்ற கற்பனை உலகில் வாசகன் மிக எளிதாக பறக்க முடியும்.ஆனால் இங்கு,   மிஷ்கின் ஒரு சுவாரசியமான நாவல்  வாசிக்கும் அனுபவத்தை காட்சி ரீதியாக கொடுத்திருக்கிறார். FANTASTIC .   தமிழ் சினிமா, ஏகப்பட்ட  கிரைம்  த்ரில்லர் வகையறாக்களை கொடுத்திருந்தாலும், இந்த அனுபவம் கொஞ்சம் புதிதானது... மிக மெதுவாய் தொடங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வத்தை தூண்டி... இறுதியில் நம்மையும் வெறித்தனமாய் தேடவைக்கும் வேட்டைதான் யுத்தம் செய். போலீஸ்காரர்களை பற்றி எத்தனையோ  விமர்சனங்கள் இருந்தாலும், அனுதினமும் இறந்த உடல்கள் முகத்தில் முழித்து, அதன் பிரச்சனைகளோடு  குடும்பம் நடத்தும் அவர்கள் வாழ்வும் சில சமயங்களில் பரிதாபத்திற்க்குரிய  ஒன்றே....   நகரில் தொடர்ச்சியாக... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பார்சல் பெட்டி முக்கியமான இடங்களை அலங்கரிக்க... வெட்டப்பட்டவர்களையும்... வெட்டியவர்களையும் தேடும் பொறுப்பு CB CID  சேரன் வசம்.. தன் தங்கை ஒரு...