Posts

SUPER டீலக்ஸ்

Image
SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ்வாமித்திரரின்  தவத்தை கலைத்த மேனகையே போல .... பல வருடம் எழுதாமல்.... BLOG பக்கமே போகாமல் இருந்த என் தவத்தை இன்று 42 வயது தியாகராஜன் குமாரராஜா கலைத்திருக்கிறார்... ஒரே ஒரு படம்... ஏகப்பட்ட வருஷங்கள் பேசி தீர்த்திருப்போம்.... போஸ்டர் டிசைன் தொடங்கி கொடுக்கா புலி போட்ட கிழிந்த டிராயர் வரை அடித்து துவைத்திருந்தாலும்... இன்னமும்  பேச  பல விஷயங்களை வைத்திருக்கிறது அந்த படம். இதோ இந்த சூப்பர் டீலக்ஸும் இன்னும் சில பல வருடங்களுக்கு பேசு பொருளாய் இருப்பது நிச்சயம்.  இடைவேளையில்....  த்தா .... இதுதாண்டா படம்.... என சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ரெஸ்ட் ரூமை தேடி ஓடுகிறோம் (1ST HALF அவ்வளவு நீளம்). அடக்கி வைத்திருக்கும் அவ்வளவும் பிய்த்து கொண்டு வரும்போது வரும் ஒரு எல்லையில்லா ஆனந்தம்.... ஒரு சிலிர்ப்பு...  ஒரு சுக சுதந்திர சுகானுபவம் முதல் பாதியிலேயே  நமக்கு கிடைத்து விடுகிறது...  ஐந்து நிமிடத்திற்க...

திருடன் போலீஸ் - விமர்சனம்

Image
அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை போலீஸ் படும் அவஸ்தைகளில் வேகம் எடுத்து,  காதல் ஸ்பீட் ப்ரேக்கர்களில் தடுமாறி, பழி வாங்கும் படலத்தில் பாதை மறந்து நிற்கும் போது, வேறு வழியில்லாமல்  காமெடி என்னும் யு டர்ன் அடிக்கிறார்கள்.   படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் இது எந்த மாதிரியான படம் என ஒரு கேள்வி கேட்டு சரியாய் விடை சொல்பவருக்கு ஒரு எவர்சில்வர் குடமோ, ஒரு வெள்ளி குத்து விளக்கோ பரிசாக கொடுக்கலாம். அந்த அளவிற்கு, இது அக்ஷன் த்ரில்லரா...? சென்டிமென்டல் டிராமாவா?, ப்ளாக் காமெடி வகையா என நம்மை குழம்ப வைத்து கும்மியடிக்கிறார்கள். ஆனாலும், சரியான அளவில் சரியான நேரத்தில் வரும் காமெடிகள் படத்தை காப்பாற்றுகிறது.  நான்கடவுள் ராஜேந்திரன் (ஆண்ட்டி) ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம். இரண்டாவது ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்.   மற்ற படங்களில் எல்லாம்,  எபோலா வைரஸ் போல பய பீதியே கொடுக்கும் ராஜேந்திரன் இதில் அம்புலிமாமா ரேஞ...

கத்தி - விமர்சனம்

Image
தொடங்குவதற்கு முன்... சாமி சத்தியமாய் நான் விஜய் ரசிகன் அல்ல. சினிமாவை சினிமாவாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம்... இணையத்தில் கத்தி கத்தி நடக்கும் சண்டைகள்  நிச்சயம் ஒரு சினிமாவுக்காக அல்ல... தனி நபர் மீது உள்ள வெறுப்போ... அல்லது தன்  அதி புத்திசாலிதனத்தை  பறைசாற்ற ஏற்படுத்திக்கொள்ளும் துடிப்போதான் சில நண்பர்களுக்கு இருக்கிறது. என்னென்ன குறைகள்... குற்றங்கள் கண்டுபிடிக்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தால்  எந்த உலக சினிமாவாலும் அவர்களை திருப்தி படுத்த முடியாது.   ஹாலிவுட்டில் அமெரிக்க அதிபரையே வில்லனாக சித்தரித்து... வேற்று கிரக வாசிகளையும் நியூயார்க் நகர வீதிகளில் உலா வர வைக்கலாம்... எவனும் எதற்கும் கேள்வி கேட்பதில்லை... அவர்களை பொறுத்த வரை ஜஸ்ட் லைக் தட் அது ஒரு சினிமா அவ்வளவே... அதற்க்கு மேல் ஒரு இழவும்  இல்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது.  ஒரே விஷயம் அவர்கள் எதிர்பார்ப்பது... படம் அவர்களை வசீகரிக்கிறதா... இல்லையா... அவ்வளவே...   ...

கடல் - விமர்சனம்

Image
எல்லோரும் கழுவி ஊற்றி விட்டார்கள், ஆனாலும், மனசை தொடுகிற ஒன்றிரண்டு காட்சிகளாவது மணி சார் ஸ்டைலில்  இருக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தான் டிக்கெட் எடுத்தேன்.  அதே போல ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தது என ஒப்புக்கொண்டாலும் மிச்ச காட்சிகள் அத்தனையும் அபத்தங்களின் உச்சம்.    மீனவ கிராமம், அங்கிருக்கும் சர்ச்சுக்கு புதிதாய் வரும் பாதிரியார், அங்கு  அவர் எடுத்து வளர்க்கும் ஒரு அநாதை சிறுவன், வேறொரு இடத்தில்  அவர் ஏற்கனவே வளர்த்து விட்டிருந்த பகையின் காரணமாய் பழி வாங்க துடிக்கும் தாதா வில்லன், அவருக்கு  வளர்ந்தும் வளராத ஒரு மகள்.. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் கடல்...  எந்த கதாபாத்திரமும் கதையில் அதன் இயல்போடு ஒட்டாமல், நமக்குள்ளும் ஒன்ற மறுத்து, கடலில் மிதக்கும் எண்ணெய் போல தனியாய் பிரிந்து அலை பாய்கிறது.    மணி  மணியான ஒன் லைனர்கள்... ரசனையான காட்சியமைப்புகள்.. இளமை துள்ளும் காதல் என எதை தேடி உள்ளே வந்தோமோ... அதை இரண்டரை மணி நேரமும் தேடி.. தேடி...  தேடி.. தேடி.... தேடி... தேடி...கிடைக்காம...

விஸ்வரூப வெற்றி...

Image
நாட்ல நீதி நேர்மை நாணயம் எல்லாம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு... கடவுளுக்கு நன்றி.. ஓ , அப்படி சொன்னால் கமலுக்கு பிடிக்காது.. நீதி தேவதைக்கு நன்றி... இவன்... கமல் ரசிகனல்ல.. சினிமாவின் ரசிகன்.....

விஸ்வரூபம் - விமர்சனம்

Image
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பெளத்த  மதங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான மதம் உண்டு. சினிமா என்கின்ற மதம்... உலகம் முழுதும் பல கோடி பேரால் விரும்பப்படும் இந்த மதத்தின், மிக முக்கிய தீவிரவாதிதான் கமல். நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம். அதனால்தான்,  தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் என்ன... மாநிலம் விட்டு மாநிலம் தாவலாம் என வரிசை கட்டிக்கொண்டு பயணித்த வாகனங்களில் எனது பிரேக் பிடிக்காத  ஓட்டை டிவிஎஸ் 50 யும் அடக்கம். கொளுத்தும் வெயில்.. மொட்டை காடு..., பழுதடைந்த சாலைகள் என பயணத்தை சிரமமாக்கும் இடர்கள் பல  இருந்தாலும்...    கோயம்புத்தூர் டு வேளந்தாவளம் (கேரளா தமிழக எல்லை)  பயணம் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற தீவிர சினிமா பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான சவாரியாகத்தான் நேற்று  இருந்திருக்க கூடும்.   அவரின் இந்த புதிய படைப்பு  நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் எ...

I SUPPORT KAMAL

Image

அட்ட கத்தி - விமர்சனம்

Image
ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்.....  நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்...    எளிதில் புரிந்து கொள்ள முடியா...  குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை  நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது  பிறந்ததில் இருந்து...  ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து..  பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால்  உலக உருண்டையில்   ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட...  மூன்றாவது படிக்கும் போது  கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா  பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால்  மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்... அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும்  இனக்கவர்ச்சி என ...

சகுனி - விமர்சனம்

Image
. மகாபாரத சகுனியின் பெயரை கெடுத்திருக்கிறார்கள்..... சூழ்ச்சி என்பது வெகு கவனமாக பின்னப்படும் ஒரு சிலந்தியின் வலை போல... அடுக்கடுக்கான சதிப்பின்னல்களும் அதை செயல்படுத்தும் விவேகமும் உடைய ஒரு ராஜ தந்திரம்தான்.  கார்த்தி இருக்கிறார்... அவர் எதை செய்தாலும்  மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்கள். பூ சுற்றுவதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும்.  திரைக்கதையில் அந்த புத்திசாலித்தனம் இல்லாதது  சகுனியே ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. ரயில்வேயின்  சப்வே திட்டத்திற்காக... அரசு ஆக்கிரமிக்கவிருக்கும்  தன் பாரம்பரிய வீட்டை காப்பாற்றுவதற்காக வழக்கம் போல ரயில் ஏறும் ஹீரோ.. வழக்கம் போல அரசியல்வாதிகளால் விரட்டியடிக்கப்பட... வழக்கம் போல முதல் பாதி முழுதும் ஹீரோயினோடு காதலித்து டூயட் பாடிவிட்டு..  அதற்க்கப்புறம்  சுதாரித்து...  வழக்கம் போல இன்டர்வெல் ப்ளாக்கில் வீட்டை காப்பாற்ற சபதம் போட்டு.. வழக்கம் போல இரண்டாம் பாதியில் அரசியல்வாதி வில்லன்களை ஏமாற்றி வழக்கம் போல இறுதியில் வீட்டை  மீட்கிறார். . என...

தடையறத் தாக்க - விமர்சனம்

Image
இது வில்லன்களின் சினிமா... ஹீரோவுக்கு ஒரு மாஸ் ஓபனிங் பார்த்திருக்கிறோம்.. ஹீரோயினுக்கு ஒரு  கிளுகிளு குளுகுளு ஓபனிங் பார்த்திருக்கிறோம்... ஆனால் வித்தியாசமாய்      வில்லன்களுக்காய் ஒரு டெரர் ஓபனிங் இந்தப்படத்தில்.  ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போது.. தீடிரென ரயில் ஹாரன் சப்தம் கேட்டால் ஒரு பதைபதைப்பும் நடுக்கமும் மனசுக்குள் எழுமே...    அதன் வீரியத்தை படம் முழுதும் உணரசெய்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஒரு பன்ச் டயலாக் கூட இல்லாத வசனங்கள்... ஓவர் பில்ட் அப் செய்ய வாய்ப்பிருந்தும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹீரோயிசம் என இது கொஞ்சம் வித்தியாச சினிமாதான். கமர்சியல் காம்ப்ரமைசிற்க்காக முதற் பாதியில் இருக்கும் இரண்டு பாடல்களையும் துணிந்து வெட்டியிருந்தால் இன்னமும் படம் ஷார்ப்பாக வந்திருக்கும். வாழ்கையில் .... .காதலில்... தொழிலில் என  கொஞ்சம் கொஞ்சமாய்  வெற்றியே ருசிக்க காத்திருக்கும் அருண் விஜய்...  விதி வசத்தால் ஒரு ரவுடி கும்பலிடம் மோத நேரும்போது நிகழும் சம்பவங்கள்தான் கதை....

நொறுக்கு தீனி -6 (10.06.12)

Image
அம்பாள் நகர் சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு. கொஞ்சமே கொஞ்சம் குறுகலான சாலை. அதில் எதிரும் புதிருமாக மீன் பாடி வண்டியிலிருந்து டேங்கர் லாரி வரை பயணிக்கிறது.  அதற்க்கு நடுவே என்னை போன்ற பாதசாரிகள் ஒரு ஆயிரம் பேர். அதிலும் மாலை வேளையில் ஒரு வாக் போய் பாருங்கள் பிரதான சாலை முடிவிலிருந்து மெயின் ரோடு வந்து சேர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. (ஆனால் வெறும் ஐந்து நிமிடங்களில் கடந்து விடக்கூடிய தூரம்தான்). எப்போதுமே திருவிழா கூட்டம்.  இடையே, சில பல பெண்கள் ஹாஸ்டல்கள் வேறு இருப்பதால்... அதில் வேறு  கவனம் தொலைத்து.. ஹி... ஹி... டாபிக் மாறுகிறது. ஆமாங்க.. சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு  விஸ்வரூபம்   - முதல்  பார்வை  பார்த்தவுடன் புருவம்  உயர்த்த  வைக்கும்  புகைப்படம். இன்னும்  இந்த   ஆள்   எதைத்தான்   மிச்சம்   ...

நொறுக்கு தீனி - 5 - (04.06.12)

Image
சென்னை - ஒரு ஆச்சரியம் நான் சென்னைக்கு வந்து இத்தோடு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொந்த ஊர் பாசம் சென்னையின் மீது ஒரு பிடிப்பை கொடுக்க மறுத்தாலும், சென்னை மீதான என் ஆச்சரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்ற வாரத்தின் ஒரு நாளில், நாங்கள் குடியிருக்கும் போர்ஷனில் மீதமுள்ள ஒரு வீட்டிற்க்கும் ஆள் வந்தாயிற்று. சொந்த ஊர் மதுரை.  பக்கத்தில்  இருக்கும் இரு போர்ஷன்களில் குடியிருப்பவர்களில் ஒருவர் காரைக்குடி... மற்றொருவர் நாகை. நான் கோயம்புத்தூர். ஆக... எல்லா ஊர் பயல்களும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். வருபவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளையும், வாழ்வின் ஜீவாதரங்களையும் சென்னை பகிர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நான் திருப்பூரில் இருக்கும் போது கவனித்ததுண்டு... மதுரை, தேனி என தினம் தினம் பனியன் கம்பெனி வேலையே நம்பி புதிது புதிதாய் வருபவர்கள் பல நூறு. திருப்பூர் சொந்த மாநில ஆட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால்... சென்னை... பல மாநில ஆட்களுக்கும் வாழ்கையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் சென்ட்ரலில், எக்மோரில் அழுக்கு சட்டை,...

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

Image
விகடனில் வந்த இயக்குனர் எழிலின் பேட்டியும், இமானின் இரண்டு பட்டாசான பாடல்களும், கேட்சியான டைட்டிலும், சிவ கார்த்திகேயன் என்னும் துருப்புசீட்டும் முதல் நாளே படம் பார்க்கும் விருப்பத்தை தந்திருந்தது. ஆனால், பத்தோடு பதினொன்று போலான காதல் படம்தான் இதுவும். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம்  கடி என எந்த விதமான அதிர்வும் தராமல் படம் நம்மை கடந்து போகிறது.   காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் அன்னப்பறவைதான்..எப்போது? நம்முள் நாம் அதை  தெளிவாய்  உணரும் போது.... அந்த உணர்வுகள் நமக்குள் கொடுக்கும் இனம் புரியா சந்தோஷமும்.... நம்மையும் சிறகு விரித்து பறக்க செய்யும் உற்சாகமும்.... காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் பறவைதான். ஆனால் இந்த படத்தின் பிரச்சனையே... அந்த காதலை நம்முள் உணர வைக்க தவறியதுதான். காதலையும் காமெடி போலவே லைட்டாய் எடுத்துக்கொள்ளும் ஹீரோ, ஹீரோவை காதலிக்கிறோமா... இல்லை குடும்பத்தை  காதலிக்கிறோமா என குழப்பியடிக்கும் ஹீரோயின் என ஒட்டியும் ஒட்டாத கேரக்டர்கள் அவர்களின் காதல் மீதோ, அல்லது படத்தின் கதை மீதோ...

நொறுக்கு தீனி - 4 (20.05.12)

Image
  தத்து பித்து out of form -  இந்த வார்த்தை கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்கையிலும் அவ்வப்போது இயல்பாய் நிகழக்கூடிய ஒன்று. சில சமயங்களில்,  எல்லாம் வெறுத்து.. என்னடா வாழ்க்கை இது என நினைக்க தோணுமே... அதேதான்! எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கும்... தீடிரென ஒரு வெறுப்பு...குழப்பம்.. .தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமை... ஒரு தேக்கம்... ஒரு speed breaker போல...  எல்லோரும் சில சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சனை இது. நன்றாக எழுதிக்கொண்டிருப்போம்.. .தீடிரென  எந்த இழவுமே தோன்றாது. வீம்புக்காய் எழுதினாலும்.. எழுதிய பின் படித்து பார்த்தால்....  நாமே காறி துப்பலாம் போல அவ்வளவு கன்றாவியாய் இருக்கும். out of form. எழுத்தாளன், நடிகன்,  விளையாட்டு வீரன்... சராசரி மனிதன் என பாகுபாடின்றி எல்லோரும் சந்திப்பது...  தீர்மானிக்க முடியா ஒரு புதிர்தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என்று ஒருத்தனுக்கும் தெரியாது...  நாளை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தேமேயென சொங்கி போக வைக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல இந்த ...