Posts

Showing posts from April, 2011

கோ - விமர்சனம்

Image
ஒரு விறுவிறுப்பான நாவல் வாசிக்கும் அனுபவத்தை  அதன் சுவை குறையாமல் அப்படியே விஷுவல் ட்ரீட்டாக தருவதில் இயக்குனர் கே.வி. ஆனந்த் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.  மணிரத்தினம் தனது ஆயுத எழுத்து படத்தில் படித்த  இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மூன்றில் ஒரு பங்காக சொல்லி சென்றதை  கே.வி இதில் முழுசாய்  பின் தொடர்ந்திருக்கிறார்.  கந்து வட்டி, கடத்தல் என படத்திற்கு படம் வேறு வேறு களம் தேடும் கே வி இதில் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு பிடித்தமான போட்டோ ஜர்னலிசம். வித விதமான புகைப்படங்களை  டைட்டிலில் வரிசைபடுத்தும் போதே போட்டோகிராபி மீதான அவரது காதல் 'கிளிக்'கிடுகிறது. . ஒரு தின நாளிதளின் சர்க்குலேஷனை அனுதினமும் உச்சியில் வைக்க உதவுவது புகைப்படக்காரர் ஜீவாவின் பணி.அன்றாட அரசியல் அக்கப்போர்களை   இவரது கேமரா வெளிச்சம் போட்டு காட்ட...  ஒரு புதிய மாறுதலாக இளைஞர் படை ஒன்று ஆட்சியே பிடிக்க நேரிடுகிறது.   ஆட்சியே பிடிக்க மறைமுகமாக உதவிய ஜீவாவையே  திடுக்கிட வைக்கும் சாணக்கிய தந்திரங்கள் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாய் வெளிப்பட... ஹீரோ ஜீவா அதை எப்படி எதிர்கொண்டு முறியடிக்கிறார் என்பதே கதை.